IMPAK GRADUATION DAY 2025 / இம்பாக் திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழா
இம்பாக் திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழா மிட்லண்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி பெற்றோர்களும் தம்பூசாமி தமிழ்ப்பள்ளி பெற்றோர்களும் வெற்றிகரமாக இம்பாக் பயிற்சியை முடிதத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசியத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு மனோகரன் மாரிமுத்து, உதவித் தலைவர் திரு சுப்பிரமணியம் இராமசாமி, பொருளாளர் முனைவர் கலைமணி, இம்பாக் திட்ட ஆலோசகர் முனைவர் சி.ம.இளந்தமிழ், இம்பாக் திட்ட ஒருங்கிணைப்பளர் திரு கிருஷ்ணன் ஆறுமுகம் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மேலும், இம்பாக் பயிற்றுநர்கள், மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியின் வாரியத் தலைவர் திரு உதயசூரியன், மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு ஸ்ரீ திவாகரன், சான்றிதழ் பெறும் பெற்றோர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இவ்வேளையில், இவ்விரண்டு பள்ளிகளிலும் இம்பாக் பயிற்சி திட்டத்தை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய தலைமையாசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களுக்கும் பள்ளி வாரியத் தலைவர்களுக்கும் இவ்விரு பள்ளிகளிகளின் பயிற்றுநர்களான திருமதி மலர்விழி, திருமதி தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் நன்றி.

